சென்னை: பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 74 பேர் பிட் அடித்து மாட்டியுள்ளனர். இது, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட தேர்வர்களின் எண்ணிக்கை விவரம் குறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. மார்ச் / ஏப்ரல் 2015-க்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் இன்று (25.03.2015) காலை 09.15 மணிக்கு துவங்கி பிற்பகல் 12.00 மணி வரை நல்ல முறையில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி நடைபெற்று முடிந்தது. இன்று நடைபெற்ற ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கை கிருஷ்ணகிரி 1 பள்ளித் தேர்வர், மதுரை 5 தனித் தேர்வர்கள், அரியலூர் 4 தனித் தேர்வர்கள் கடலூர் 43 தனித் தேர்வர்கள் , 1 பள்ளித் தேர்வர் திருவண்ணாமலை 8 தனித் தேர்வர்கள், 1 பள்ளித் தேர்வர் வேலூர் 9 தனித் தேர்வர்கள், 1 பள்ளித் தேர்வர் சென்னை 1 தனித்தேர்வர் என மொத்தம் 74 தேர்வர்கள் (4 பள்ளித் தேர்வர்கள் ; 70 தனித்தேர்வர்கள்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 74 பேர் பிட் அடித்து மாட்டியுள்ளனர்
சென்னை: பத்தாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 74 பேர் பிட் அடித்து மாட்டியுள்ளனர். இது, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட தேர்வர்களின் எண்ணிக்கை விவரம் குறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. மார்ச் / ஏப்ரல் 2015-க்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் இன்று (25.03.2015) காலை 09.15 மணிக்கு துவங்கி பிற்பகல் 12.00 மணி வரை நல்ல முறையில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி நடைபெற்று முடிந்தது. இன்று நடைபெற்ற ஆங்கிலம் முதல் தாள் தேர்வில்…
1–2 minutes



Leave a Reply