நெகிழ வைத்த ஆசிரியர்; உருகும் ஐபிஎஸ் அதிகாரி!

அந்த வகையில் ஐபிஎஸ் அதிகாரி ஷைலேந்திர பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பாராட்டுக் கருத்து இது...

திருவள்ளூர் வெளியகரம் அரசுப் பள்ளி ஆசிரியர் பகவான் பணி மாற்றலாகி வேறு ஊருக்குச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து, பள்ளியில் அவரது வகுப்பில் படித்த மாணவர்கள் அழுது புரண்டு எங்களை விட்டுச் சென்றுவிடாதீர்கள் என்று கூறிய தகவலும் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாயின. .இது தமிழகத்தில் பலரது கவனத்தையும் கவர்ந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரின் பாசமான நடவடிக்கைகளை மாணவர்கள் விரும்புகின்றனர் என்பதை எடுத்துக் காட்டிய இந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு, பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஐபிஎஸ் அதிகாரி ஷைலேந்திர பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பாராட்டுக் கருத்து இது…

திருவள்ளூர், வெளியகரம் அரசு பள்ளி ஆசிரியர் பகவான் அவர்களுக்கு பாராட்டுக்கள். நண்பராக,வழிகாட்டியாக, தத்துவ ஞானியாக ஒரு ஆசிரியர். மாணவர்கள், சென்று விடாதீர்கள் என்று மன்னாடியது என்னை நெகிழ வைத்தது.