
தெலுங்கானாவில் ஒரு தாசில்தார் எரிக்கப்பட்ட நிலையில் இந்த பெண் தாசில்தார் முன் ஜாக்கிரதையாக என்ன செய்துள்ளார் என்று பாருங்கள் ….
பத்திகொண்டா எம்ஆர்ஓ அலுவலகத்தில் தாசில்தார் நாற்காலி அருகில் யாரும் நெருங்க முடியாதபடி குறுக்காக கயிறு கட்டினார்.
தெலங்காணா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மேட் தாசில்தார் விஜயா ரெட்டியை உயிரோடு எரித்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து வருவாய்த்துறை ஊழியர்கள் இன்னும் விடுபடவில்லை.
கர்நூல் மாவட்டம் பத்திகொண்டா தாசில்தார் உமாமகேஸ்வரி தன் சேம்பரில் குறுக்காக கயிறு கட்டியுள்ளார்.
விண்ணப்பம் கொடுக்க வருபவர்கள் யாராக இருந்தாலும் கயிறுக்கு அப்புறம் இருந்தே கொடுக்க வேண்டும் என்றும் உள்ளே யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் பணியாளர்களிடம் உத்தரவிட்டுள்ளார்.
தாசில்தாரின் செயலைப் பார்த்து பணியாளர்கள் மட்டுமின்றி வரும் பொது மக்களும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
தாசில்தார் உமா மகேஸ்வரியை நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “எங்க பாதுகாப்பில் ஜாக்கிரதையாக நாங்க இருக்க வேண்டாமா?” என்று பதிலளித்துள்ளார்.