
லிப்ட் வருவதற்குள் திறந்து கொண்ட கதவு. இளைஞன் மரணம். விஜயவாடாவில் கவர்னர் பேட்டையில் சோகம் .
விஜயவாடாவில், அப்பார்ட்மெண்ட் ஒன்றில் லிஃப்ட் தளத்தில் வந்து நிற்கும் முன்பே கதவு திறந்து கொண்டது. இதை அறியாமல் வெளிக் கதவைக் கடந்து உள்ளே நுழைந்த இளைஞர் ஷேக் இர்பான், பரிதாபமாக லிப்ட் இடைவெளியில் கீழே விழுந்தான். அந்த இளைஞன் மரணம் அடைந்ததாக போலீஸார் கூறியுள்ளனர்.
பந்தர்ரோடில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் ஷேக் இர்ஃபான் வசித்து வந்தான். இன்று காலை ஐந்தாம் மாடியில் இருந்து கீழே இறங்குவதற்கு லிஃப்ட் அருகில் வந்து பொத்தானை அழுத்தினான்.
பட்டனை அழுத்தியதும், உடனே கதவு திறந்து கொண்டது. ஆனால் அப்போது லிப்ட் அந்த மாடிக்கு வந்திருக்கவில்லை. ஆனால், அதனை கவனிக்காத இர்ஃபான் உள்ளே கால் வைத்து அடிவைக்க உடனே லிஃப்ட் ரூமிற்குள் ஐந்தாம் மாடியில் இருந்து கீழே விழுந்து அங்கேயே மரணமடைந்தான்.
செய்தி அறிந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்தை சோதனையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.