paliyal vankodumai 2 - 2026

தந்தை ஒருவர் சாலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கி கிடந்த தனது மகளை தோளில் சுமந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது. இளம்பெண் ஒருவர் சில மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையோரம் தூக்கி வீசப்பட்டார். பெரும் கொடூரத்தை எதிர்கொண்ட அப்பெண் மயக்கத்துடன் கிடந்துள்ளார்.

paliyal vankodumai - 2026

தகவல் அடிப்படையில் அங்கு சென்ற அப்பெண்ணின் தந்தை மயங்கி கிடந்த தனது மகளை அங்குள்ள அரசு மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணால் நடக்க முடியாததால் தனது மகளுக்காக சக்கர நாற்காலி ஒன்று தருமாறு கேட்டு உள்ளார். ஆனால் அந்த மருத்துவமனை நிர்வாகம் இதில் பல சட்ட சிக்கல்கள் ஏற்பட கூடிய விவகாரம் அதனால் சக்கர நாற்காலி தர முடியாது என்று சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

paliyal vankodumai 1 - 2026

இதனால் அந்த பெண்ணின் தந்தை தனது மகளை தோளில் சுமந்து சென்று தனது மகளை காப்பாற்ற சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இளம்பெண்ணை இக்கொடூரத்திற்கு உள்ளாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending