chandra babu naidu e1565862389210 - 2026

நானே போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறேன்… சந்திரபாபு நாயுடு. கர்நாடகா விவசாயிகளின் கைது பற்றி தெலுகு தேசம் கட்சித் தலைவர், முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆத்திரப்பட்டார். உடனடியாக கர்நாடக விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்!

” இல்லாவிட்டால் நானே கிருஷ்ணலங்கா போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறேன். எவ்வாறு விடுதலை செய்யாமல் இருப்பார்கள் என்று பார்த்து விடுகிறேன். கிருஷ்ணலங்கா போலீஸ் ஸ்டேஷனுக்கு எவ்வாறு கர்நாடகா விவசாயிகளை அனுப்பினீர்கள்?

கர்நாடகாவில் இருந்து ஆந்திர தலைநகர் விவசாயிகளுக்கு ஆதரவாக வந்த விவசாயிகளை அநியாயமாக கைது செய்வதா? இது மிகவும் கீழான செயல். அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்?

சக விவசாயிகளின் கஷ்டத்தில் பங்கு கொண்டார்கள். ஒரு விவசாயி கஷ்டப்படும் போது இன்னொரு விவசாயி பார்த்துக் கொண்டு சும்மா இருப்பானா? நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று காட்டுவது கூட தவறா?” என்று போலீசாரை வினவினார் சந்திரபாபு நாயுடு.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending