andhra chilli2 - 2026

ஆந்திரா விவசாயிகளுக்கு கரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிளகாய் விலை ஒரேடியாக படுத்துவிட்டதுதான் அதற்குக் காரணம்.

சைனாவை நடுங்க வைக்கும் கரோனா வைரஸ் சிறிது சிறிதாக பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா நோய் பதிவாகி உள்ளது. இதன் எஃபெக்ட் இப்போது குண்டூர் மிளகாய் மேல் விழுந்துள்ளது. மிளகாய் விலை பாதியாக குறைந்து விட்டது.

முன்பு குவின்டால் இருபதாயிரம் விற்ற மிளகாய் திடீரென்று பத்தாயிரத்திற்கு படுத்துவிட்டது. கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது நின்று போனதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

andhra chilli1 - 2026

ஆசியாவிலேயே மிகப் பெரும் மிளகாய் மார்க்கெட்டாக பெயர்பெற்ற குண்டூர் மிர்ச்சி யார்டில் ஜனவரி தொடக்கத்தில் குவிண்டால் இருபதாயிரம் விலை போனது. 10 நாட்களுக்கு முன் 10 ஆயிரமாக படுத்து விட்டது.

குண்டூரில் வாங்கிய மிளகாயை வியாபாரிகள் சைனா, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். கரோனா பயத்தால் ஏற்றுமதி செய்வது அங்கங்கே தேங்கி நின்று விட்டன. பிற நாடுகளும் இறக்குமதியை நிறுத்தி விட்டதால் மிளகாய் விலை படுத்துவிட்டது.

andhra chilli - 2026

விலை ஆர்வம் ஊட்டும் விதத்தில் இருக்கிறது என்று நம்பிக்கையோடு இந்த சீசனில் மிளகாயை மிகப்பெரிய அளவில் விவசாயிகள் சாகுபடி செய்தார்கள். தற்போது கரோனா பாதிப்பால் விவசாயிகள் குழப்பத்திலும் கவலையிலும். ஆழ்ந்துள்ளார்கள்!

ALSO READ:  ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending