மும்பை: பகவத் கீதை போட்டியில் முதலிடம் பெற்றார் மாணவி மரியம் சித்திக். முஸ்லிம் மாணவியான இவர் முதலிடம் பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மும்பையைச் சேர்ந்த மாணவி மரியம் ஆசிப் சித்திக் மும்பை மீரா ரோட் காஸ்மோபாலிடன் பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வருகிறார். மும்பையில் நடந்த கீதை சேம்பியன் லீக் போட்டியில் கலந்து கொண்டு இவர் முதல் பரிசைப் பெற்றுள்ளார். மும்பையில் இஸ்கான் அமைப்பு கீதை சேம்பியன் லீக் போட்டியை நடத்தியது. பகவத் கீதை குறித்து எழுத்துத் தேர்வு போட்டி நடத்தப்பட்டது. இதில் 195 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 617 பேர் பேர் கலந்து கொண்டனர். இதில் மரியம் ஆசிப் சித்திக் முதல் பரிசு பெற்றார். சித்திக் பைபிளும் படித்து வருகிறாராம். குரான் விரிவுரை ஆற்றுவதற்கான பயிற்சியும் எடுத்து வருகிறாராம். தற்போது மொழிபெயர்க்கப்பட்ட கீதையைப் படித்துள்ள மரியம், இஸ்கான் வைத்த ஏதேனும் ஒரு பதிலைத் தேர்வு செய்யும் தேர்வில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari