மக்கள் பசியால் வாடக் கூடாது; நவம்பர் வரை இலவச ரேஷன் பொருள்கள்: பிரதமர் உரை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
modiji
modiji

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு உரை நிகழ்த்தினார். அதில், பொதுமக்கள் பசியால் வாடக்கூடாது என்றும், அதற்காகவே வரும் நவம்பர் இறுதி வரை ரேஷன் கடையில் இலவசமாக பொருள்கள் வழங்கப்படும் என்றும் கூறினார்.

ஊரடங்கு தொடர்பாக 6வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை நிக்ழ்த்தினார்.

பிரதமரின் உரையில் இருந்து..

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பல நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுகிறது. பருவமழைக் காலங்களின் போது நோய் தொற்று குறித்து மிகுந்த எச்சரிக்கை வேண்டும்.

நவம்பர் மாதம் இறுதி வரை ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும். ஏழை மக்கள் வங்கி கணக்கில் ரூ.31,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது! பிரதமர் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.50,000 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பல நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுகிறது. பருவமழைக் காலங்களின் போது நோய் தொற்று குறித்து மிகுந்த எச்சரிக்கை வேண்டும்.

நவம்பர் மாதம் இறுதி வரை ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும். ஏழை மக்கள் வங்கி கணக்கில் ரூ.31,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது! பிரதமர் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.50,000 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது!”

modiji
modiji

நாடு முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை இரண்டாம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு! கொரோனாவுக்கு எதிராகப் போரிட்டு ஊரடங்கு தளர்வு 2ம் கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம்! கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 2-ஆவது கட்ட தளர்வை நோக்கி முன்னேறி இருக்கிறோம்

உரிய நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கொரோனாவும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது! மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

2 அடி இடைவெளி மற்றும் முக கவசம் அணிவது போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கிறது. மழைக்காலம் தொடங்க உள்ள சூழலில் பொதுமக்கள் மேலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

modiji
modiji

பிற நாடுகளை ஒப்பிடும்போது நாம் இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதில் முன்னோடியாக இருக்கின்றோம். இப்போது செய்யக்கூடிய சிறு தவறுகள் கூட பெரிய இழப்புகளை கொண்டுவரலாம் பல இடங்களில் பொதுவாக பொதுமக்கள் கடைபிடிக்கவில்லை மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

கொரோனா பெரும்தொற்றுக்கு எதிரான போரில் நாம் தளர்வு விதிமுறை 2.0 க்குள் நுழைந்திருக்கிறோம். அதே சமயம், தளர்வு விதிமுறைகள் 1.0 அமலாக்கப்பட்டதிலிருந்து தனிப்பட்ட மற்றும் சமூக நடத்தையில் அதிகரிக்கும் அலட்சியத்தையும் நாம் பார்க்கிறோம்.

இந்த தளர்வு நேரத்தில் சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்; விதிகளை மீறுவோரை அதிகம் எச்சரிக்க வேண்டியது அவசியமாகிறது!

தற்போதைய சூழ்நிலையை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது கட்டுப்பாடுகள் மூலம் பல லட்சம் ரூபாய்களை நாம் மிச்சப்படுத்தி உள்ளோம் கட்டுப்பாடுகளும் நெறிமுறைகளும் அனைவருக்கும் பொருந்தும்! ஏழை மக்கள் வங்கி கணக்கில் ரூ.31,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

modiji
modiji

பிரதமர் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.50,000 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது! அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன!

இது 130 கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றும் நடவடிக்கையாகும். ஊராட்சி தலைவரோ, பிரதமரோ, இந்தியாவின் சட்டத்தை விட மேலானவர் யாரும் இல்லை. ஏழைகள் உணவின்றி தவிக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது; நாட்டில் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்காக 90,000 கோடி செலவிடப்படும்; பிரதமரின் வறுமை ஒழிப்பு திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.

modiji
modiji

யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வது தான் பொது முடக்கத்தின் போது உச்சக்கட்ட முன்னுரிமையாக இருந்தது. அந்த வகையில், பொது முடக்கம் அறிவிக்கப்பட்டவுடன், பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தை அரசு கொண்டு வந்தது

விவசாயிகளுக்கும், வரிசெலுத்துவோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பருவநிலை காலத்தில் விவசாயத்திற்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன… என்று கூறினார் பிரதமர் நரேந்திர மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.