chinaapp
chinaapp

59 சீன செயலிகளுக்கான தடை இறுதியாக இருக்காது, மேலும் தெளிவுபடுத்தலை சமர்ப்பிக்க அரசாங்கம் அந்த நிறுவனங்களை அனுமதிக்கக் கூடும் என்று சிஎன்பிசி-டிவி 18 தெரிவித்துள்ளது.

இந்த “அவசரகால” தடை ஒரு இடைக்கால நடவடிக்கை என்றும், எந்த தாமதமும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் செய்தி சேனலிடம் அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக அது கூறியுள்ளது.

எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கமிட்டி (MeitY), மீடிஒய் செயலாளருக்கு இந்தப் பரிந்துரையை அனுப்புவதற்கு முன்பாக, இந்த செயலிகளின் நிறுவனங்கள் தகுந்த பதிலளிக்கவும் தெளிவுபடுத்தவும் நிறுவனங்களை விசாரிப்பதற்கு அனுமதிக்கக்கூடும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரைகளை MeitY செயலாளர் பரிசோதித்த பின்னரே இறுதி உத்தரவை நிறைவேற்ற முடியும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. அதுவரை, செயலிகளின் பயன்பாடுகளுக்கு இடைக்கால தடை அமலில் இருக்கும்.

உண்மையான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) அதிகரித்து வரும் எல்லை பதட்டங்களுக்கு மத்தியில் 59 சீன பயன்பாடுகளை இந்திய அரசு ஜூன் 29 அன்று தடை செய்தது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

அரசால் பட்டியலிடப்பட்ட செயலிகள் “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு எதிராக சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன” என்று MeitY ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதே நேரம் இந்த தடைக்கு எதிராக டிக்டாக் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், அரசுக்கு மற்றும் பங்குதாரர்களுக்கு தகுந்த விளக்கத்தை அளிப்பதாக தெரிவித்திருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending