vankodumai 1 1

மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் முஹம்மட் பஜார் பகுதியில் வசிக்கும் ஒரு பழங்குடியின பெண் அந்த பகுதியில் வசிக்கும் வேறு ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்தார்.

இதனால் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் அந்த பெண்ணை பஞ்சாயத்தில் நிறுத்தி அந்த பெண்ணுக்கு 10000 ரூபாய் அபராதமும் ,அந்த இளைஞருக்கு 50000ரூபாய் அபராதமும் கட்ட சொன்னார்கள். ஆனால் அந்த பெண்ணும் அநத இளைஞனும் அந்த பணத்தை கட்ட மறுத்துள்ளார்கள் .

இதனால் கோபமுற்ற அந்த ஊர் பஞ்ஞாயத்தார்கள் அந்த பெண்ணையும் அவரின் காதலனையும் ஆகஸ்டு 9ம் தேதியன்று ஒரு பூஜைக்கு வரசொன்னர்கள்.

அப்போது அந்த காதலனை கட்டிப்போட்டு அடித்து அவர் முன்னாடியே அந்த ஊரை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் ஐந்து பேர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு காலையில் இருவரையும் துரத்தியடித்துள்ளனர் .

இதனால் அந்த பெண்ணும் அந்த இளைஞரும் அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார்கள். புகாரை பெற்ற போலீசார் அந்த கிராமத்தில் விசாரணை செய்து , பலாத்காரம் செய்த ஐந்து பேரையும் கைது செய்தனர்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இதுபோல பல சம்பவங்கள் மேற்கு வங்க மாநில கிராமங்களில் நடப்பதாகவும் பல பலாத்கார வழக்குகள் வெளியே தெரியாமலே இருந்து விடுவதாகவும் அந்த ஊரை சேர்ந்தவர்கள் கூறினார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending