tamilisai kcr - 2026

தெலங்காணா முதல்வர் கேசிஆர் சனிக்கிழமையன்று கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனை ராஜ்பவனுக்கு சென்று சந்தித்தார்.

கவர்னரை அவருடைய சித்தப்பாவின் மறைவு குறித்து விசாரிப்பதற்காக சென்றதாக தெரிகிறது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் சிற்றப்பா வசந்தகுமார் வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

கவர்னரின் தந்தை குமரி அனந்தன் கூட சற்று உடல் நலம் இன்றி இருக்கிறார். அதனால் கேசிஆர் சனிக்கிழமை ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை விசாரித்தார். தந்தையின் உடல்நிலை குறித்து கூட முதலமைச்சர் கேசிஆர் கவர்னரை கேட்டு தெரிந்து கொண்டார்.

செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து 20 நாட்களுக்கு தெலங்காணா அசெம்பிளி கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது. அது குறித்து கூட முதல்வர் கவர்னர் இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் கோவிட்19 நிபந்தனைகளுக்கு உட்பட்டு கூட்டத்தொடரை நடத்துவோம் என்றும் அங்கத்தினர்களின் இடையே சமூக இடைவெளி இருக்கும்படியாக எச்சரிக்கையாக இருப்போம் என்றும் கேசிஆர் கவர்னரிடம் தெரிவித்தார். அசெம்பிளி கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளப் போகும் பில்கள் குறித்தும் கவர்னர் தமிழிசைக்கு முதல்வர் விவரித்ததாக தெரிகிறது.

ALSO READ:  தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending