புதுதில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ., தனது 1300 கிளைகளின் பெயர்கள் மற்றும் ஐஎப்எஸ்சி கோட் ஆகியவற்றை மாற்றியுள்ளது.

இது குறித்து எஸ்பிஐ மேலாண் இயக்குனர் பிரவீன் குப்தா கூறுகையில், ”வாடிக்கையாளர்களுக்கு இது பற்றி தெரிவிக்கப்பட்டு விட்டது. புதிய ஐஎஃப்எஸ்சி கோட்கள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பழைய ஐஎப்எஸ்சி கோட் மூலம் நடக்கும் பண பரிவர்த்தனைகள் புதிய கோட்களுக்கு மாற்றப்படும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது. ஸ்டேட் வங்கிகளின் துணை வங்கிகளையும் ஸ்டேட் வங்கிகியுடன் இணைப்பதால், இந்த மாற்றம் செய்யப்படுகிறது எனக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending