புதுச்சேரி: நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொய்யான தகவல் கூறிவருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாடு நாளை தொடங்குகிறது. இதில் பங்கேற்க வந்துள்ள கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மக்கள் நலனே முக்கியம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, பெருநிறுவனங்களின் நலனுக்காக செயல்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலம் வேளாண் நிலங்களை பறித்து பெருநிறுவனங்களுக்கு அளிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. விவசாயிகள் நலனுக்கு எதிரான சட்டத்தைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு இடதுசாரிகளுக்கு உள்ளது என சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending