goa-govt கோவா; கோவா மாநில கலை மற்றும் கலாச்சாரத் துறை ஊழியர்கள், கை இல்லாத சட்டை, பாக்கெட்கள் பல வைத்த பேன்ட், ஜீன்ஸ், டீ ஷர்ட் ஆகியவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவா மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் மாநில கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் தயானந்த் மந்த்ரேகர் இதனைத் தெரிவித்தார். அப்போது அவர், ஊழியர்கள் அலுவலகத்துக்கு சாதாரண உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று மீண்டும் அறுவுறுத்தப்பட்டுள்ளது. ஜீன்ஸ், டீ ஷர்ட், பல பாக்கெட் கொண்ட பேன்ட், கை இல்லாத சட்டை ஆகியவற்றை அணிந்து வரக்கூடாது. அலுவல் ரீதியிலான நிகழ்ச்சிகளுக்கும் இத்தகைய உடைகளை அணிய தடைவிதித்துள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending