indian-bank
indian-bank

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நெட் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் வரும் 15ஆம் தேதி வரை தடைப்படும் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பழைமையான அரசு துறை வங்கிகளில் ஒன்றான அலகாபாத் வங்கி விரைவில் இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 15ஆம் தேதியன்று இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மென்பொருள் இணைப்பு வேலைகளை இந்தியன் வங்கி தொடங்கியுள்ளது.

இதனை அடுத்து வரும் பிப்ரவரி 15ஆம் தேதி காலை 9மணி வரை இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நெட் பேங்கிங், ஏடிஎம், யூபிஐ, மொபைல் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் கிடைப்பதில் சிக்கல் இருக்குமென அந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், அலகாபாத் வங்கியின் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், பணப் பரிவர்த்தனை, செக் போன்ற சேவைகளை பயன்படுத்துவதில் தற்காலிக பிரச்சினைகள் ஏற்படும். இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்ட பிறகு அனைத்து சேவைகளையும் வழக்கம் போல பயன்படுத்த முடியும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending