auto-1
auto-1

ஆபீஸ் முடிந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்ற பெண்ணை அந்த ஆட்டோ ஓட்டுநர் உள்பட நால்வர் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசிக்கும் 30 வயதான ஒரு பெண், நொய்டாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிறார். அவர் தினமும் ஆட்டோவில் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் வழக்கமுடையவர். இதை அந்த பகுதியில் உள்ள சில ஆட்டோ டிரைவர்களும் அவரின் சில நண்பர்களும் நோட்டமிட்டு வந்தனர். அதனால் அந்த பெண்ணை கடத்திச்செல்ல திட்டமிட்டார்கள்

அந்த பெண் புதன்கிழமை இரவு காசியாபாத்தில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து நொய்டாவில் உள்ள கவுதம் புத்த நகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்ல அங்குள்ள ஆட்டோவில் ஏறினார். அப்போது அந்த ஆட்டோவில் அந்த பெண்ணோடு சில ஆண்களும் இருந்தார்கள். அப்போது அந்த பெண் அவர்களை பற்றி அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டபோது அவர்கள் வழியில் இறங்கி விடுவார்கள் என்றார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

பின்னர் அந்த ஆட்டோ காசியாபாத்தில் உள்ள லால் குவான் அருகே சென்ற போது, அந்த ஆட்டோவில் இருந்த ஆண்கள் அனைவரும் சேர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்தார்கள். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை அங்குள்ள ஹப்பூர் மாவட்டத்தின் பில்குவா பகுதியில் உள்ள ஒரு சாலையில் தூக்கி வீசிவிட்டு சென்றார்கள்.

அதன் பிறகு அந்த பெண் அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending