facebook - 2026

உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேலை பார்க்கும் ஒரு இளம் பெண் பேஸ் புக்கில் ஒரு இளைஞரோடு நட்பு கொண்டு பழகினார். அப்போது அந்த இளைஞர் தனது பெயர் ஆரிஃப் என்றும், தான் ரே பரேலியைச் சேர்ந்தவர் என்றும் தான் அந்த பெண்ணின் மதத்தை சேர்ந்தவர் என்றும் பொய் சொல்லி பழகியுள்ளார்.

அதை உண்மையென்று நம்பிய அந்த பெண், அவர் தன்னுடைய மதத்தை சேர்ந்தவர் என்பதால் நன்றாக பழகினார். அதன் பிறகு அந்த பெண்ணிடம் அந்த இளைஞர், அவருக்கு தான் ஒரு வேலை வாங்கி தருவதாக கூறினார்.

அதை உண்மையென்று நம்பிய அவர் அவரின் ஆசையை பூர்த்தி செய்ய சம்மதம் தெரிவித்தார். அதன் பிறகு அந்த பெண்ணை ஒரு தனிமையான இடத்திற்கு வர சொன்ன அவர் அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் பிறகு அந்த இளைஞர் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த 21 வயதான பெண் அவரை பற்றி விசாரித்த போது, அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதையறிந்து அதிச்சியடைந்துள்ளார்.

அதன் பிறகு அவரிடம் தன்னை ஏமாற்றி பாலியல் உறவு கொண்டதை பற்றியும், மத விஷயத்தை பற்றியும் கேட்டுள்ளார். அப்போது அந்த இளைஞர் அந்த பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் அந்த இளைஞரை பற்றி விசாரித்து, அவரை கைது செய்ய முயற்சி செய்து வருகிறார்கள்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending