vankodumai 1 - 2026

குழந்தைகளுடன் வசித்து வந்த விதவை பெண்ணை மாமனார் உறவு முறை கொண்ட ஒரு நபர் ஆறு மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் பிலிபிட் நகரை சேர்ந்தவர் 32 வயதான பெண். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது மூன்று குழந்தைகளுடன் தன் சகோதரியின் வீட்டிற்கு அருகில் தனியாக வசித்து வந்துள்ளார்.

சகோதரியின் 55 வயதான மாமனார் தனியாக வசித்த பெண்ணிடம் பாசமாக பேசுவது, அக்கறை எடுத்து கொள்வது என இருந்துள்ளார். அதனை நம்பிய அந்த பெண்ணும் வயதில் பெரியவர் தானே என நம்பி பழகியுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு மாமனார் டீ போட்டு கொடுத்துள்ளார்.

அதனை குடிந்த அந்த பெண் மயங்கிய நிலையில் அவரை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துகொண்டார். பின்னர் அந்த வீடியோவை காட்டி அந்த பெண்ணிடம் ஆறு மாதமாக பாலியல் அத்துமீறல் செய்துள்ளார்.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

இதனை எதிர்த்த அந்த பெண்ணையும், குழந்தைகளையும் அடிப்பது, உதைப்பது என இருந்த நிலையில் ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த அந்த பெண் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending