adhitha thakara - 2026

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

இதனால் அங்கு பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு, சில நகரங்களில் இரவுநேர ஊரடங்கு என நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டாவது நாளாக 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

uthav thakkara - 2026

இந்த நிலையில், சிவசேனா கட்சித் தலைவரும் மகாராஷ்டிரா மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் மகனும் அமைச்சருமான ஆதித்யா தாக்கரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவருமே பரிசோதித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending