ediurappa - 2026

கர்நாடக முதல்வர் எடியூரப்பா காய்ச்சல் காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காய்ச்சல் காரணமாக வெள்ளிக்கிழமை காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடியூரப்பா அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது இரண்டாம் முறையாகும்.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள வேறொரு மருத்துவமனைக்கு எடியூரப்பா மாற்றப்படவுள்ளார்.

இதற்கிடையே, கர்நாடகத்தில் பரவி வரும் கொரோனா குறித்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் நேற்று உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending