ca exam
ca exam

ஒடிசா மாநிலத்தில் கொரோனோ நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவர் சி.ஏ தேர்விற்காக மருத்துவமனையிலேயே படித்துவரும் இளைஞருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை நேற்று மாவட்ட ஆட்சியர் விஜய் நோயாளிகள் மற்றும் மருத்துவமனையை ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றிருந்த பொழுது அங்கு படித்துக் கொண்டிருந்த நபரை பார்த்தவுடன் அருகில் சென்றுள்ளார்.

அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். அதில், வெற்றி தற்செயலான நிகழ்வு அல்ல உங்களுக்கு அர்ப்பணிப்புத் தேவை.

கொரோனோ மருத்துவமனைக்கு நான் சென்றிருந்தபோது இந்த நபர் சிஏ தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன்.

உங்களின் அர்ப்பணிப்பு உங்களுடைய வலியை மறக்கச் செய்கிறது. அதன்பிறகு வரும் ஒவ்வொரு வெற்றியும் ஒரு சம்பிரதாயம்தான் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பதிவுடன் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்த நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending