gold - 2026

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் சொகுசு பேருந்தில் இருந்து 5 கிலோ தங்க கட்டிகள் மற்றும் தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பஞ்சலிங்கால் சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்திய போலீசார் ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்ற தனியார் சொகுசு பேருந்தை சோதனையிட்டனர்.

அதில் முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட 5 கிலோ 300 கிராம் எடையுடைய தங்க கட்டிகள், தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக பெங்களூரை சேர்ந்த ஹேம்சந்த் ஜெயின் என்பவரை கைது செய்துள்ள போலீசார் மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

கடத்தலுக்காக தங்கம் எடுத்துச் செல்லப்பட்டதா, எங்கிருந்து தங்கம் பெறப்பட்டது என பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending