online - 2026

ஒரு கல்லூரியின் ஆன் லைன் வகுப்பில் ஆபாச படம் ஓட்டிய நபரை போலீஸ் தேடி வருகிறது .

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் சாகினகாவைச் சேர்ந்த கல்லூரியின் ஆன்லைன் வகுப்பை ஹேக்கிங் செய்து நிர்வாணமாக நடனமாடியதற்காக சில நாட்களுக்கு முன்பு மைனர் சிறுவன் கைது செய்யப்பட்டார்.

இது நடந்த இரண்டு நாட்களில், ஜுஹு போலீசார் ஒரு வைல் ஆன்லைன் வகுப்பின் போது ஆபாச வீடியோக்களை புகுத்திய , ஹேக்கருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

கடந்த வாரம், மும்பையின் வைல் பார்லேவைச் சேர்ந்த கல்லூரி ஒரு ஆன்லைன் வகுப்பை நடத்தி கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென ஆபாசக் கிளிப்புகள் ஓட தொடங்கின.

சுமார் 30-40 மாணவர்கள் மற்றும் பெண் பேராசிரியர்கள் வகுப்பின் ஒரு பகுதியாக இருந்தனர். அதன் பிறகு அந்த கல்லூரி நிர்வாகம் போலீசை அணுகியது, உடனடியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர் ,

அப்போது பொழுதுபோக்குக்காக இந்த ஆபாச படங்களை , ஓடவிட்டு கல்லூரி வகுப்பு ஹேக் செய்யப்பட்டதாக

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் ஐபி முகவரியை போலீசார் கண்காணித்து விரைவில் அந்த நபரை கைது செய்ய உள்ளார்கள்

ஆன்லைன் வகுப்புகளுக்கான அடையாளங்கள் மற்றும் கடவுச்சொற்களை கணினிகளுக்கு வெளியே உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், மாணவர்களுக்கு நுழைவு அளிப்பதற்கு முன் அவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் போலீசார் கல்லூரிகளை கேட்டுகொண்டார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending