கொரோனா சிகிச்சைக்குச் சென்ற சிறுமி! மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை!

Published:

woman - 2026

கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனை பணியாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவிலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அந்த மருத்துவமனையில் இரவு பணியாளராக 26 வயதுடைய சச்சின் என்பவர் பணியில் இருந்திருக்கிறார்.

அவர் சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய சிறுமி இது தொடர்பில் புகார் தெரிவித்துள்ளார். எனவே சிறுமிக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

அப்போது சிறுமி கூறியதாவது, அன்று இரவில் சச்சின் என்னிடம் மோசமாக பேசினார்.

மேலும் தவறாக நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார். மேலும் அந்த சிறுமி, தன் 10 வயதில் ஒரு உறவினரும் தன்னிடம் இவ்வாறு நடந்ததாக கூறினார்.

எனவே மருத்துவமனை பணியாளர் சச்சினையும், சிறுமி கூறிய 28 வயதுடைய அந்த உறவினரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Related articles

Recent articles

spot_img