retaion
retaion

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஓட்டுநரை கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் செந்தில் வேல்குமார் தலைமையிலான போலீசார் மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் வாகன சோதனையில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக கேரளாவை நோக்கி சென்ற லாரியை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை மேற்கொண்டனர். அப்போது, லாரியில் மூட்டை மூட்டையாக சுமார் 25 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து கடலூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் நக்கீரன்(29) என்பரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, நெல்லை மாவட்டம் தாழையூத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து, லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், மார்த்தாண்டம் காவ நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், லாரி ஓட்நடுர் நக்கீரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

இதனிடையே, குழித்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அந்த வழியாக சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்திச் சென்ற ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

கார் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending