உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம், உடைந்து விழுந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு மூத்த இன்ஜினியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம், உடைந்து விழுந்ததில், 12 பேர் பலியாகினர்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசியில், ரயில்வே ஸ்டேஷன் அருகில், புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. நேற்று கட்டுமானப் பணி நடந்தபோது, திடீரென பாலம் சரிந்து, சாலையில் சென்ற வாகனங்களின் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில், 12 பேர் உயிரிழந்ததோடு, 50-க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.