காவிரி வழக்கு நாளை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், வரைவு திட்டத்தை திருத்தி தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு அமைப்பு தொடர்பான தமிழகத்தின் 2 கோரிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது
காவிரி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது
வரைவு செயல் திட்டம் தொடர்பாக தமிழகம், கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்தன.
இதில் காவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க என்றும் காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நதிநீர் பங்கீடு அமைப்பின் தலைமையகத்தை பெண்களூரில் அமைப்பதை உறுதி செய்தது.
மேலும் காவிரி நதிநீர் பங்கீடு அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
காவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க தயார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த காவிரி வரைவு திட்டத்தில்,, ஒரு சில அம்சங்களை தவிர்த்து பிற அம்சங்களை ஏற்க தயார் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.