காலா திரைப்படம் குறித்து பல்வேறு மட்டங்களில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துவரும் நிலையில், கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாகக் கேட்கப் பட்ட கேள்விக்கு முதல்வர் குமாரசாமி பதில் அளித்துள்ளார்.
இது குறித்துக் குறிப்பிட்ட குமாரசாமி, காலா திரைப்படம் தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஏற்கெனவே முடிவு எடுத்துள்ளது. காலா திரைப்படத்தை கன்னடர்கள் நிராகரித்துள்ளனர். கன்னட அமைப்புகளும் கூட படத்தை வெளியிடக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளன. யாருக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்படாத வகையில் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என்று கூறினார்.