செஷல்ஸ் அதிபருக்கு டோர்னியர் விமானத்தை பரிசளித்த இந்தியா.. !

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள செஷல்ஸ் அதிபர் டேன்னி ஃபாரேவுக்கு நாட்டின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டோர்னியர் விமானத்தை பரிசளித்தார்.

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்துள்ள செஷல்ஸ் அதிபர் டேன்னி ஃபாரேவுக்கு நாட்டின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டோர்னியர் விமானத்தை பரிசளித்தார்.

6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் செஷல்ஸ் அதிபர் டேன்னி ஃபாரே. இவர் நேற்று பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் செஷல்ஸ் அதிபருக்கு இந்தியா சார்பில் டோர்னியர் விமானம் ஒன்றை பரிசளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதை அடுத்து, ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிட்., தயாரிப்பான டோர்னியர் ரக டிஓ 228 விமானத்தை செஷல்ஸ் அதிபரிடம் தில்லி பாலம் விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஒப்படைத்தார். வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் இந்த நிகழ்வின் போது உடன் இருந்தனர்.