வீட்டில் இருந்தபடியே, 50 ரூபாய் கட்டணத்தில் அரசு சேவைகளை பெறும் வசதிக்கு, டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.
டெல்லியில், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, குடியிருப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ் உள்ளிட்ட, 100 சேவைகளை, அலுவலகம் அல்லது வீட்டில் இருந்தபடியே பெறுவதற்கு, சேவை கட்டணமாக, 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், நிர்வாக சீர்திருத்த துறையின் இந்த பரிந்துரைக்கு, அனுமதி வழங்கப்பட்டது.