சபரிமலைக்கு வர்றீங்களா? எச்சரிக்கை! பம்பை ஆத்துல குளிக்காதீங்க! நிலைமை ரொம்ப மோசம்!

கேரளத்தில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரை கொள்ளாமல் ஓடுகிறது. அணைக்கட்டுகள் திறந்து விடப் பட்டுள்ளன.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சபரிமலையில் நிரபுத்ரி பூஜைக்கு வரும் பக்தர்களை பத்தனம்திட்ட மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மலையில் ஏறும் போது மிகவும் எச்சரிக்கையாக ஏறவேண்டும் என்று கூறியுள்ளார் மாவட்ட ஆட்சியர்.

வடசேரிக்கர, நாராயணத்தொடு பகுதிகளில் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. சபரிமலை மின்சார திட்டத்துக்கான அணையும் திறக்கப் பட்டுள்ளது. பம்பை ஆறு கரைகளை உடைத்துக் கொண்டு செல்கிறது. எனவே பம்பை ஆற்றில் நீராட வேண்டும் என்று யாரும் முயற்சி செய்யவேண்டாம். இன்னும் மழை மோசமடையலாம் என்று எதிர்பார்க்கப் படுவதால், வெகு எச்சரிக்கையாக நடந்து கொள்ளவும் என்று பத்தனம்திட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.