சென்னை: சென்னையில் வரும் ஆக.30ஆம் தேதி நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மட்ட்டுமல்ல, தேசியத் தலைவர் அமித்ஷாவே பங்கேற்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வரும் அக்.30 ஆம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ., மைதானத்தில் திமுக., சார்பில் நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதுபோல், பாஜக.,வுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பாஜக., சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கலந்துகொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஆக.28ஆம் தேதி சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை அரங்கில் நடைபெறவுள்ள வாஜ்பாய் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.