திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என்று கூறிய தீர்ப்பை எதிர்த்து மேலும் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
அனைத்து கேரள பிராமணர் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ஏராளமான பிழைகள் உள்ளதாக சீராய்வு மனுவில் வாதம் செய்யப்பட்டுள்ளது.