ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது

இந்தியா தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்


IMG 20181219 192355 - 2026

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

திட்டமிடப்பட இடத்தில் ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

ராணுவ பயன்பாட்டுக்கான ஜிசாட் 7ஏ செயற்கைகோள் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி நிலையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்11 ராக்கெட் திட்டமிட்டபடி மாலை 4.10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட் 7ஏ என்ற செயற்கைகோளை சுமந்தபடி ராக்கெட் சீறிப் பாய்ந்தது.

அதி நவீன் ஜிசாட் 7ஏ செயற்கைகோள் திட்டமிட்டபடி புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோவின் 39வது தகவல் தொடர்பு செயற்கை கோளான ஜிசாட் 7ஏ, 8 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படைக்கான தகவல் தொடர்பை மேம்படுத்த இந்த செயற்கைகோள் வழிவகுக்கும்.

போர்க்காலங்களில் விமானங்களின் இருப்பிடத்தை துல்லியமாக அறிய முடியும், இந்திய எல்லைப் பகுதியை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கவும் பயன்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.