மகாராஷ்ட்ர மாநிலத்தில் வருகிற 29-ந்தேதி 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் மும்பை உள்பட 17 தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
நாடு முழுவதும் பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. மராட்டியத்தில் 48 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
முதல் கட்டமாக வார்தா, ராம்டெக், நாக்பூர், பண்டாரா- கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராப்பூர், யவத்மால்-வாசிம் ஆகிய 7 தொகுதிகளுக்கு வருகிற 11-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி முடிவடைந்தது. இந்த 7 தொகுதிகளில் மொத்தம் 116 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
2-ம் கட்டமாக வருகிற 18-ந்தேதி புல்தானா, அகோலா, அமராவதி, ஹிங்கோலி, நாந்தெட், பர்பானி, பீட், உஸ்மனாபாத், லாத்தூர், சோலாப்பூர் ஆகிய 10 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இந்த தொகுதிகளில் கடந்த 19-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 26-ந் தேதி முடிவடைந்தது. 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 10 தொகுதிகளில் 179 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.
முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல்கள் நடைபெறும் 17 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 295 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த தொகுதிகளில் மத்திய மந்திரி நிதின் கட்காரி (நாக்பூர்), மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் (நாந்தெட்), முன்னாள் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, பிரகாஷ் அம்பேத்கர் (சோலாப்பூர்) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இந்த தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தற்போது அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3-ம் கட்டமாக ஜல்காவ், ராவேர், ஜல்னா, அவுரங்காபாத், ராய்காட், புனே, பாராமதி, அகமதுநகர், மாதா, சாங்கிலி, சத்தாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர், ஹட்கனங்கலே ஆகிய 14 தொகுதிகளுக்கு வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
4-ம் கட்டமாக ஏப்ரல் 29-ந் தேதி நந்தூர்பர், துலே, தின்டோரி, நாசிக், பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மும்பை வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, வடமத்திய மும்பை, தென்மத்திய மும்பை, தென்மும்பை, மாவல், சிரூர், ஷீரடி ஆகிய 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வருகிற 9-ந்தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 10-ந் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. 12-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
மராட்டியத்தில் பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதா- சிவசேனா, காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன.
இதுதவிர சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் வன்ஜித் பகுஜன் அகாடி கூட்டணி, பகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி கூட்டணி உள்ளிட்ட கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் களத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Hiya! Quick question that’s entirely off topic. Do you know how to make
your site mobile friendly? My weblog looks weird
when browsing from my iphone 4. I’m trying to find a template or plugin that might be able to resolve this problem.
If you have any suggestions, please share. Thank you!