ARREST - 2026மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் காவல் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து கொள்ளையடித்ததாக ஒரு பெண் அவரது காதலனுடன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரையும் கொள்ளை வழக்கின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட பெண், மக்களிடம் கொள்ளையடிக்க போலீஸ் அதிகாரியாக தன்னை காட்டிக்கொண்டுள்ளார். இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான அவரது காதலன், மத்திய பிரதேச காவல்துறையில் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் சாட்டப்பட்ட ஆண் அவரது மனைவியின் போலீஸ் சீருடையை அவருடைய காதலிக்கு வழங்கியுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து போலி போலீஸ் அடையாள அட்டையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் போலீசாரால் வெளியிடப்படவில்லை.இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending