கேளிக்கை பூங்காவில் அறுந்த ராட்டினம் ! இருவர் உயிரழப்பு !

Published:

ratinam - 2026குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதாபாத். இங்கு இந்திய அளவில் புகழ்பெற்ற கேளிக்கை பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கு ராட்சத ராட்டினம் என்று உபயோகிக்கப்படுகிறது.  ராட்டினத்தின் ஒரு பகுதியானது அதன் மையப்பகுதியில் பலமாக இடித்து, இணைப்பு துண்டித்துபோய் ராட்டினம் அறுந்து விழுந்து உள்ளது.

விபத்து ஏற்பட்ட போது ராட்டினத்தில் 31 பேர் பயணித்தனர். 29 பேரை அகமதாபாத் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 27 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அகமதாபாத் ஊராட்சி தலைவரான விஜய் நெஹ்ரா செய்தியாளர்களை சந்தித்தார். விபத்து குறித்து அவர் கூறுகையில், “இந்த கோர விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன்.

ராட்சச ராட்டினத்தில் இயக்குவதற்கு கேளிக்கை பூங்கா நிர்வாகத்தினர் உரிய உரிமைகளை பெற்றார்களா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. மேலும் காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விபத்திற்கான காரணங்களை ஆராய விரைந்துள்ளனர்.

இதுபோன்ற விபத்து இனி ஏற்படாமல் தற்காப்பு நடவடிக்கைகளை முழு செயல்பாட்டுடன் அரசு கவனிக்கும் என்று உறுதியளிக்கிறேன்” என்று கூறினார். குஜராத் மாநிலத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img