நான்கு மாடி கட்டிடம் சரிந்து விழுந்தது! மும்பையில் நடந்த சோகம்!

இந்தியா சற்றுமுன்

mumbai - 2026மும்பை டோங்கரியில் டண்டெல் தெருவில் உள்ள கேசர்பாய் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. கட்டடத்தின் இடிபாடுகளில் 40 க்கும் மேலானோர் சிக்கியிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உதவியுடன் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதே இந்த சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

அந்த விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பலரும் அருகில் இருக்கும் ஜேஜே மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த கட்டட விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ள மகாராஷ்டிரா முதலமைச்சர், விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.