kudaku - 2026கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்ற அறிவிப்பின் காரணமாக, அங்கே மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  நாளை முதல் 5 நாட்களுக்கு குடகு மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக பருவமழை தீவிரமாக பெய்துவரும் சூழலில் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதை அடுத்து கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 855 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அதில் விநாடிக்கு கபினி அணையில் இருந்து 500 கன அடி , கேஆர்எஸ் அணையிலிருந்து 355 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப் பட்டிருக்கிறது.

2 responses to “கர்நாடகா குடகிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை !”

  1. ஏன் shah எப்போதும் ஆல்காட்டி விரலால் அதட்டியே பேசுகிறார் ?

  2. ஏன் shah எப்போதும் ஆல்காட்டி விரலால் அதட்டியே பேசுகிறார் ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending