கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டுவைக்கலாமா? -துண்டு சீட்டு பரிதாபங்கள்
திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது அவர் பதவியில் இல்லை முன்னாள் முதல்வராக மட்டுமே அறியப்பட்டார் ஒரு முன்னாள் முதல்வருக்கு இதுவரை தமிழக அரசியல் என்ன மரியாதை கொடுக்கப்பட்டது அதை செய்யாமல் தேவை இன்றி மிகப்பெரிய அளவில் கூட்டம் கூட்டி கடற்கரையில் சமாதிக்கு இடம் கொடுத்து திமுகவின் அரசியலுக்கு துணை போய்விட்டது அதிமுக என்று ஒவ்வொருவரும் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்
மத்திய அரசில் பிரதமராக இருந்த மோடி சென்னைக்கு வந்தவர் கருணாநிதியின் வீடு தேடி சென்று நலம் விசாரித்தார் அதுவே மிகப்பெரும் தவறு என்று தமிழகத்தில் உள்ள திமுக எதிர்ப்பாளர்கள் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் கருணாநிதியின் கடைசி காலத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மத்திய அமைச்சர்கள் தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவர் என பலரும் வந்து நலம் விசாரித்து சென்றார்கள்
கருணாநிதி முதல்வராக இருந்தபோது காமராஜருக்கு என்ன மரியாதை செய்யப்பட்டதோ அத்தகைய மரியாதையை செய்திருக்க வேண்டுமென்று பழைய காங்கிரஸார் ஒருபுறம் சொல்லிக்கொண்டிருக்க.. ஒரு கார்ப்பரேஷன் கவுன்சிலருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் பிரதமர் அளவுக்கு கருணாநிதிக்கு மரியாதை கொடுத்தது தவறு என்று அதிமுகவினர் புலம்பிக் கொண்டிருந்தனர்
காரணம் ஜெயலலிதா சமாதி விவகாரத்தில் திமுகவினர் அரசியலை மேற்கொண்டு நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்து பின்னர் வேறுவழியின்றி கருணாநிதி சமாதி காக வழக்கை வாபஸ் பெற்றனர் ஆனால் உண்மையில் சமூக ஆர்வலர்கள் ஆக இருந்திருந்தால் இரண்டு சம்பாதிக்கும் எதிர்த்து வழக்குகளை பதிவு செய்திருப்பார்கள் அப்படிப்பட்ட யாரும் தமிழகத்தில் இல்லாமல் போனார்கள்
கருணாநிதி சமாதி காக கடற்கரையில் இடம் வேண்டி அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இடம் தொங்கு தொங்கு என்று தொங்கிக் கொண்டிருந்தார் மு க ஸ்டாலின்.
அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதிக்கு சமாதி எழுப்ப வேண்டுமென்று அப்போது கடற்கரையின் கதவைத் தட்டினார்கள் அதற்காக இரவு நேரம் கூட நீதிமன்றம் விழித்தது இந்த காட்சியை கண்டு சாமானியன் அதிர்ந்துதான் தான் போனாள்
வருடக்கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கும் தங்களது வழக்கெல்லாம் ஒரு தூசு இது மட்டும் நீதிமன்றத்துக்கு அவ்வளவு முக்கியமா சாமானியனுக்கு ஒரு நீதி அரசியல்வாதிக்கு ஒரு நீதியா என்று அப்போது பொதுமக்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத்தான் செய்தார்கள்
இப்போது மு க ஸ்டாலின் கருணாநிதிக்காக ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்கள் என்று திட்டி தீர்க்கிறார் நல்ல திட்டு தான் எடப்பாடியும் அதிமுகவினரும் வாங்கிக் கட்டிக் கொள்ளட்டும்