
அவதூறு செய்திகள் கிளப்புவதாக ஸ்ரீரங்கம் ஆலய அதிகாரிகள் கொடுத்த புகாரில், சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜனை கைது செய்தனர் போலீசார்! அவர் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர்கள், நிர்வாகிகள் குறித்து தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பி வருவதாக, கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ரங்கராஜன் என்பவரை இன்று காலை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரங்கராஜன் இன்று மாலை திருச்சி ஜெ.எம் 3 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சோமசுந்தரம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது ரங்கராஜன் தரப்பில் கோயில் நிர்வாக முறைகேடுகள் குறித்து மட்டுமே கருத்துக்களை ஆதாரங்களுடன் வெளியிட்டதாகவும், தனிப்பட்ட முறையில் சம்மந்தப்பட்ட நபர்களுக்கும், ரங்கராஜனுக்கும் பகை இல்லை என்றும் வாதிட்டனர்.
இதனைக் கேட்ட மாஜிஸ்திரேட் சோமசுந்தரம் சொந்த ஜாமீனில் ரங்கராஜனை விடுவித்து அனுப்பி வைத்தார்.