
71வது தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் ஓபன் சாம்பியன்ஷிப் 2019 போட்டிகள் மதுரையில் இன்று காலை தொடங்கின.
கலாம் டிரெடிஷனல் ஆர்ட்ஸ் அகாடெமி, தனலக்ஷ்மி ட்ரெடிஷனல் ஆர்ஸ் ட்ரட்ஸ் மதுரை, தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோஷியேஷன் ஆகியவை இணைந்து இந்தப் போட்டிகளை நடத்துகின்றன.

சனிக்கிழமை இன்று காலை 10மணிக்கு மதுரை தெப்பக்குளம், கீதா நடனகோபால நாயகி மந்திரில் வைத்து இந்தப் போட்டிகள் தொடங்கின.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்வனம் நிறுவுனர் ஜே.சங்கரபாண்டியன், பூம் மதுரை ரத்த தான மைய நிர்வாகி என்.ஷர்மிளா, தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் அசோஷியேஷன் தலைவர் டி.வி. மதன்குமார், கலாம் ட்ரெடிஷனல் ஆர்ட்ஸ் அகாடமி தலைவர் டாக்டர் எஸ்.ராஜமகேந்திரன், ஸ்மார்ட் கேர் என்சினியரிங் உரிமையாளர் எஸ்.விநோத்குமார், கலாம் ஈவண்ட்ஸ் நிர்வாக இயக்குனர்கள் ஜெயா, திவ்யா, கின்னஸ் சாதனையாளர் எஸ்.யோகா வைஷ்ணவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு இந்த யோகா ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியை சிறப்பித்து வருகின்றனர்.

கலாம் ட்ரெடிஷனல் ஆர்ட்ஸ் அகாடெமி நிறுவுனர் எஸ். சுந்தர், தனலக்ஷ்மி ட்ரெடிஷனல் ஆர்ட்ஸ் டிரஸ்ட் இயக்குனர் ஜி.எஸ்.சுரேஷ் மற்றும் இதன் தலைவர் கே.சதீஷ் குமார் ஆகியோர் இந்தப் போட்டியின் ஏற்பாட்டாளர்களாக இருந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.









Leave a Reply