செங்கோட்டை அருகேயுள்ளது மீனாட்சிபுரம் பகுதியை சார்ந்தவர் முருகையா இவரது மனைவி கமலம் (35) என்பவர் கோவில்பட்டி செல்வதற்காக செங்கோட்டை-பண்பொழி சாலையை கடந்துள்ளார். 
அப்போது செங்கோட்டையிலிருந்து கோவில்பட்டி செல்லும் தனியார் பேரூந்து வேகமாக வந்துள்ளது.இதில் எதிர்பாராத விதமாக பேரூந்து கமலம் மீது மோதியது. இதில் கமலம் சம்பவ  இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். 
இதனை கண்ட அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். 
பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபபட்டனர். இதனால் செங்கோட்டை- கடையநல்லூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending