பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா–உல்–ஹக், முன்னாள் கேப்டன் அப்ரிதி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பெருத்த ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்றனர். உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறியது பாகிஸ்தான். இந்தத் தோல்வியால், அவர்களது உலகக் கோப்பை கனவு நனவாகவில்லை. உலகக் கோப்பை போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக இருவரும் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இருப்பினும், டி20, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவர்கள் தொடர்ந்து விளையாடவுள்ளனர். 2002–ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், லாகூரில் அறிமுகமானார் மிஸ்பா உல் ஹக். தற்போது 40 வயதாகும் அவர் 162 ஒருநாள் போட்டிகளில் விளையாடியும் அதிகபட்சமாக 96 ரன்னே எடுத்துள்ளார். இதுவரை அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது அவருக்கு மிகப் பெரிய குறை. அதே நேரம் அப்ரிதி கடந்த 5 உலகக் கோப்பை போட்டிகளிலும் தொடர்ந்து ஆடிவருகிறார். ஆனால் அவர் இடம்பெற்ற அணி ஒரு முறைகூட கோப்பையை வெல்லவில்லை. சென்ற உலகக் கோப்பையிலும் கூட, அவரது தலைமையில் விளையாடி அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோற்றது.
பெருத்த ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்ற அப்ரிதி, மிஸ்பா!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari