மீனவ மக்களின் வாழ்வதாரமாக விளங்கும் சென்னையிலுள்ள கொசஸ்தலை ஆற்றில் ஏராளமான கழிவுகள் கொட்டப்படுகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல வருடங்களாக போராடி வருகின்றனர்.
ஆனால் அவர்களின் குரலுக்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார் கமல்ஹாசன்.
மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் முனையங்களை நடுஆற்றில் கட்டியுள்ளன.
அவர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையை மக்களுக்கு அரசு கொடுப்பத்தில்லை.
ஆபத்து வந்தபின் கூப்பிட்டு கதறாமல் வருமுன் காப்போம் என மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து எண்ணூர் துறைமுகப் பகுதிகளில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்பட்டதால் பாழடைந்த இடங்களை நடிகர் கமல்ஹாசன்  பார்வையிட்டார்.
அங்கு சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.
ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending