தென்காசி தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான குழு சார்பில் மின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு செயற்பொறியாளர் ராஜசேகர் தலைமை தாங்கி மின் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார். மின் விபத்து தடுப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை பொது மக்களுக்கு வழங்கினார். உதவி செயற்பொறியாளர் அருள் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தென்காசி சிலுவை சங்க செயலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். கருத்தரங்கில் உதவி செயற்பொறியாளர்கள் இரத்தினவேல், கற்பக விநாயக சுந்தரம், முத்தையா, வனஜா, உதவி பொறியாளர்கள் கலா, அன்னராஜி உட்பட மின்வாரிய பணியாளர்கள், கட்டிட ஒப்பந்தக்காரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
