பந்தளம் அரண்மனை ராணி அம்பா தம்புராட்டி காலமானதால் டிசம்பர் 6ம் தேதிவரை பக்தர்கள் திருவாபரண தரிசனம் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 
சபரிமலை மண்டல – மகரவிளக்கு காலத்தில் இந்த திருவாபரணங்களை பக்தர்கள் தரிசனத்திற்காக வைப்பார்கள். 
தினமும் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து ஐயப்பனின் திருவாபரணத்தை தரிசித்து செல்வது வழக்கம். 
இந்நிலையில் பந்தளம் அரண்மனை ராணி அம்பா தம்புராட்டி (94) நேற்று இறந்தார். இதனால் நேற்று முதல் டிசம்பர் 6ம் தேதிவரை 11 நாட்கள் திருவாபரணங்கள் பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending