திருத்தணியில் இருந்து இன்று வேல் யாத்திரையை துவங்குவதாக பாஜகவினர் அறிவித்தனர். ஆனால், இந்த ஊர்வலத்திற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.
ஆனாலும், தடைகளி மீறி யாத்திரையை நடத்துவோம் என பாஜக தலைவர் முருகன் நேற்று அறிவித்தார்.
அதன்படி, இன்று காலை பாஜக தலைவர் முருகன் வேலுடன் திருத்தணி சென்று தரிசனம் செய்தார். அப்போது அவருடன் பல கார் மற்றும் வேன்களில் பாஜக தொண்டர்கள் உடன் சென்றனர். எனவே, திருத்தணியில் போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். அப்போது முருகனை போலீசார் கைது செய்தனர். அதேபோல், முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலையும் கைது செய்யப்பட்டு பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News