தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். அதேபோல், விருதுநகரில் ரூ.11.36 கோடி மதிப்பீட்டில் 15 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய அவர் ‘தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களால் பலன் கிடைத்தது.
அமைச்சர் துரைக்கண்ணு இறப்பு தொடர்பாக தவறான தகவல்களை பரப்புகிறார் ஸ்டாலின்; கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர், செவிலியர்களை கொச்சைப்படுத்துகிறார் ஸ்டாலின். கருணாநிதி சிகிச்சை எடுத்துக்கொண்ட அதே மருத்துவமனையில்தான் துரைக்கண்ணுவும் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சதி எனில் அதை ஸ்டாலின் விரிவாக கூற வேண்டும்.
ஸ்டாலின் மீது உச்சநீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு உள்ளது; 6 வருடத்திற்கு ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியமா என்பது கேள்விகுறி ஆகும். தம்மீது உள்ள குற்றத்தை எண்ணிப்பார்த்து ஸ்டாலின் பேச வேண்டும் என அவர் பேசினார்.
Source: Dhinasari – Daily Tamil News – Vellithirai News